கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அடுத்த ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
இந்த மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரை தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆறு மாத சம்பளத்தை வரவு வைக்குமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நன்கொடை குறித்து விஜயதாச ராஜபக்ஷ லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரியவுக்கும் அறிவித்துள்ளார்.