Our Feeds


Wednesday, May 11, 2022

ShortNews Admin

வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள், நிர்வாகிகள் அடையாளம் - காவல்துறை அறிவிப்பு

 

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில்
 சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.

அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

 

வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்களை திரட்டியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியது கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »