உண்டியல் முறைமைக்கு சட்டவிரோதமான முறையில் பணம் கடத்துவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் 50,000 யூரோ பணத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேக நபர், பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படை தெரிவித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி சுமார் 18.69 மில்லியன் இலங்கை ரூபாவாகும் எனவும் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு நாணய தட்டுப்பாட்டுக்கு காரணமான உண்டியல் முறையானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.