எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று எரிபொருள் தாங்கி கப்பல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், எனவே பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.