(நா.தனுஜா)
பயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 3 வருட காலமாக வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மொஹமட் இமாம் மொஹமட் இம்ரானை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதனை வலியுறுத்தி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஏ.ஆர்.பி.ஜே. அல்விஸுக்கு கடிதமொன்றை எழுதுமாறு பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
காத்தான்குடி பொலிஸாரினால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி 20 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்ட தகவல்தொழில்நுட்ப பொறியியல் மாணவன் மொஹமட் இமாம் மொஹமட் இம்ரான் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.