எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படவுள்ளது என லிட்ரோ நிறுவன தலைவர் கூறியுள்ளார்.
எனவே எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு தாங்கிய கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளன எனவே கையிருப்பு வரும் வரை வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.