வீரகெட்டிய, கார்ல்டன் தோட்டத்தின் மீதான தாக்குதலின்போது அங்கிருந்த பெறுமதியான, உயர்ந்த இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 வயதான யுவதி ஒருவரை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும் தனது வீட்டின் முன்பாக காணப்பட்ட நாய்க்குட்டியை எடுத்து தான் வைத்திருந்ததாக யுவதி கூறியுள்ள நிலையில், கார்ல்டன் தோட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.