அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய
ஹர்த்தால் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்றவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.அதற்கமைய சுகாதாரம், தபால், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல முக்கிய தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பாடசாலைக்கு வருவதில்லை என அதன் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி மக்களை சங்கடப்படுத்தும் நோக்கில் சில குழுக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் தாங்கள் இணையப் போவதில்லை என்றும், சேவை நடவடிக்கைகளைத் தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விமான நிலையத்தின் பிரமுகர் பிரிவு மற்றும் மக்கள் பாதையில் பயணிகளை சுத்தப்படுத்தும் பணியும் இன்று இடைநிறுத்தப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பேசிய சங்கத்தின் செயலாளர் ஜெயசிங்க பண்டார.
ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இன்று இயங்காது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் உள்ளக ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் இன்று இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.