Our Feeds


Saturday, May 7, 2022

SHAHNI RAMEES

ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்


 

அக்கரைப்பற்று-இறக்காமம்-வாங்காமம் பகுதியில்

உள்ள ஆறொன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நேற்று பிற்பகல் குறித்த ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தநிலையில், அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை அறிக்கையை மேற்கோள்காட்டி பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »