கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர
விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிவிபத்தால் கட்டடத்தின் முன்பகுதி உருக்குலைந்தது.
தூக்கி வீசப்பட்ட கட்டடத்தின் சிமெண்ட் கற்கள் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கார்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும், 64 பேர் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் ஏற்பட்ட எரிவாயு கசிவே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
உருக்குலைந்த கட்டடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.