மிரிஹான சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 15 பேர் இன்று (02) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி, கடந்த மார்ச் 31 ஆம் திகதி, ஜனாதிபதியின் மிரிஹானவில் அமைந்துள்ள இல்லத்திற்கு அருகில் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக 54 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்படி, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 15 பேர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளனர்.