மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மோதலின்போது, சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் அக்கறையுள்ள அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்கவில்லை எனவும், நாட்டில் புலனாய்வு பிரிவு செயற்படுவதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.