இன்றும் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.