ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும்
எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று அரசாங்க தரப்பில் இருந்து தனி குழுவாக செயற்படும் 11 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற பேச்சு வார்தைகளின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை, எந்தவித அர்த்தமும் அற்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.