இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.