எதிர்வரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் இந்த செய்தியை இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி மறுத்துள்ளார்.
குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இலங்கை மின்சார சபை இன்று (08) கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அண்மைய நாட்களில் மின்வெட்டு நேரம் 5 மணித்தியாலமாக அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.