நாட்டில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அவர் சிஐடிக்கு அழைக்கப்பட்டு, இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகியோர் இன்று(18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதல் நடத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று(17) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.