பயணிகளின் தேவைக்கு ஏற்ப
நாளை புகையிரதங்கள் இயக்கப்படும் என புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில தொழிற்சங்கங்கள் நாளைய தினம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதில்லையென அறிவித்துள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.