சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்று என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தான் VPN ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும், இதே முறைமையை பலர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனூடாக சமூக வலைத்தளங்களை முடக்கியது பயனற்ற செயற்பாடாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.