ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கான பாடலை எழுதிய பசன் லியனகே, பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
”பாடல் ஒன்றினால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால், நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன்” என பசன் லியனகே, தனது பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.
பேஸ்புக் பதிவின் தமிழாக்கம்…
”எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை!.
பாடல் ஒன்றினால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்றால், நான் அனைவரிடமும் மன்னிப்பு கோருகின்றேன். எனது பாடலை விருப்பத்துடன் கேட்டமையினாலேயே, அன்று முதல் இன்று வரை நான் இந்த இடத்தில் இருக்கின்றேன். அதனால், இந்த சந்தர்ப்பத்தில் நான் உங்களுடனேயே இருக்கின்றேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆட்சியில் இருந்த கட்சிகளின் பின்னால் இனியும் செல்ல வேண்டாம். நாட்டை கட்டியெழுப்ப புதிய தரப்பிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம். அந்த காலம் முதல் தமது சொந்த நலனுக்காக சுரண்டியவர்களினாலேயே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால், இதற்கு முன்னர் இந்த நாடு அபிவிருத்தி அடைந்திருக்கும்” என அவர் கூறுகின்றார்.