தற்போது உகண்டாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களைக் கூட ஊழல் அற்ற அரசியல் சக்தியினால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னனியில் தேசிய மக்கள் சக்திதான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னனியில் ஏன் இருக்க வேண்டும்? நாங்கள் தான் முன்னாள் தெளிவாக இருக்றோமே என பதிலளித்தார்.