மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
முதலாவதாக நாம் காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை கவனத்தில் எடுத்து அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும்.
மக்கள் எழுச்சியை அடக்க முற்பட்டால் அதனால் அதனால் நாட்டுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படும். அதேவேளை இதனால் இறுதியில் இராணுவ ஆட்சி ஒன்றும் உருவாக வாய்ப்பு உள்ளது.