நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பாராளுமன்றில் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியுமாயின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று செயல்படுமாறு பேச்சுவார்த்தை நடத்தியதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.