ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஹட்டன் நகரில் இன்று முற்பகல் வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.
ஹட்டன் நகரில் டெலிகோம் முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.