நாட்டில் சனிக்கிழமை (02) மாலை 6 மணியிலிருந்து நாளை திங்கட்கிழமை (04) மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பொருட்படுத்தாது நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்களை பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாகவும் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.
கொழும்பின் பல இடங்களிலும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
நீர்கொழும்பு, ராஜகிரிய ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதுடன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இன்றிரவு தீப்பந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.