யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்று (28) போராட்டத்தில் ஈடுபட்டன.
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கத்தினர் இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன யாழ் பல்கலைகழக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.