விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் இன்று அட்டாளைச்சேனையில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டனர்.
மு.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற குறித்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.