மூன்றாவது தடவையாக மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரேத பரிசோதனையானது அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவானுமாகிய லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யூ தினுகா மதுஷானி மற்றும் ருச்சிர நதீர ஆகியோருடன் இரசாயன பகுப்பாய்வாளர் வனிதா பண்டாரநாயக்க தடயவியல் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரசன்னத்துடன் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவி புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்காக சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரரால் 26.04.2019 இரவு சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இது தொடர்பான விசாரணைகளில் சாரா ஜஸ்மின் இறந்ததாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சாரா தொடர்பான மர்மங்கள் நீடித்து வரும் நிலையில் அவர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.சாராவை அடையாளம் காண உடல் உறுப்புகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் என வெளியிடப்பட்ட பெயர்களின் விபரங்கள் பின்வருமாறு
முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் சகோதரர்), முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி), முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னி/முகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் சகோதரர்), ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி),ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் தந்தை),அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் தாய்), முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் சகோதரி), இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும் முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்), அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி). மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி), அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்), முகமட் றில்வான் மீரா (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்), முகமட் றில்வான் மருவான் சஹீட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்), முகமட் ஜெய்னி அமாயா ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்), முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்), முகமட் ஸஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் ஸஹ்ரானின் மகன்) மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை.