முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து பசில் ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இன்று தகவல் வெளியான நிலையில் பசில் ராஜபக்ஷ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
அத தெரன செய்திச் சேவையின் செய்தித் தொகுப்பாளர் திலோத்தமா தனது முகநூல் பக்கத்தில் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.