(வி.சுகிர்தகுமார்)
அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் இன்று (12) அதிகாலை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றதுடன் வீடு திரும்பினர்.
குறித்த மைதானத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாலை முதல் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இருப்பினும் குறித்த இடத்தில் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லாத நிலையிலும் மக்கள் வெளியேறாமல் காத்திருந்தனர்.
இந்த நிலையில் பலர் எவ்வாறாயினும் எரிவாயு சிலிண்டர்களை பெற்றே குறித்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்வோம் எனவும் சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு கூட தம்மால் முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அங்கிருந்த பலர் கவலையுடன் கருத்து தெரிவித்தனர்.