2021ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021ஆம் கல்வி ஆண்டுக்கான, சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், மே மாதம் 20ஆம் மற்றும் 21ஆம் திகதியளவில், தொடர்புபடுத்தல் மத்திய நிலையங்களுக்கு வினாத்தாள்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.