கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு, க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.