ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ரம்புக்கனை காவல்நிலைய பொறுப்பதிகாரி, ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த மேற்படி அதிகாரிகள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.