இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின் வலையமைப்பை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த போது இந்திய விஜயத்தின் போது இந்திய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே அந்த கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கு இந்தியா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.