சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை வர்த்தக சம்மேளன குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இதற்கமைவான பொருளாதார கட்டமைப்பை நிறுவும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.