(நா.தனுஜா)
காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் நான்காவது நாளான இன்று (12) லசந்த விக்ரமதுங்க, சிவராம், நிமலராஜன் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்துக்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களையும் காட்சிப்படுத்தினர்.
மேலும் கோட்டா கோ கம என பேராட்டக்காரர்களால் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் நடமாடும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் தங்கக் கூடியவாறு கூடாரங்களும் அமைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அங்கு தற்காலிக வைத்தியசாலை, நூலகம் ஆகியவற்றுக்காக கூடாரமொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு புதுமணத் தம்பதியர் மணக்கோலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததனையும் அவதானிக்க முடிந்தது.