கொழும்பு, காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராக ‘ கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப் பொருளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த ஆர்ப்பாட்டக்காரர்களிடையே சுமார் சுமார் 250 அரச உளவாளிகள் இருப்பதாக பொலிஸ் உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
எது எவ்வாறாயினும், ஜனாதிபதி பதவி விலகும்வரை ஆர்ப்பாட்டத்தை தொடரப் போவதாக கூறும் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கும் தேநீர், பிஸ்கட்டுக்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அமைதியாக தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.