ஜனாதிபதி தலைமையில்நடந்த ஆளும் கட்சி கூட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்து இருந்தது.
எனினும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக்கட்சியின் மத்தியக்குழு கூடியது.
அதில், காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளது.
இதை ஜனாதிபதி நிறைவேற்றாத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.