ஒரு டன் இரும்பு கம்பியின் விலை மீண்டும் 85,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி இரண்டு இலட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் புதிய விலை மூன்று இலட்சத்து 39ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய முன்னர் 1,040 ரூபாவுக்கு விற்பனை செற்றப்பட்ட 10 மில்லிமீற்றர் கம்பியின் புதிய விலை 1,268 ரூபாவாகும்.
ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி தற்போது 1 887 ரூபாவுக்கும் 2 725 ரூபாவுக்கு விற்கப்பட்ட 16 மில்லிமீற்றர் கம்பி 3200 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இவ்வாறு இரும்பு கம்பியின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிகின்றன.
அத்துடன் இரும்பு கம்பிகளுக்கான தட்டுப்பாடும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.