Our Feeds


Tuesday, April 19, 2022

ShortNews Admin

BREAKING: பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு- புதிய கட்டண விபரங்கள் இதோ..!

 

பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 27 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், லங்கா ஐஓசி நிறுவனமும் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்தமையே இவ்வாறு பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தனியார் பஸ்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »