Our Feeds


Friday, April 8, 2022

Anonymous

BREAKING: பாராளுமன்ற இன்றைய அமர்விலிருந்து SLPP MP திஸ்ஸ குட்டியாராச்சி & SJB MP சமிந்த விஜேசிரி ஆகியோர் வெளியேற்றம்.

 



நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு  எம்.பி.க்களை  வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.


குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து  வெளியேற்றுவதற்கென  நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு  இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சபாநாயகர் இந்த முடிவை அறிவித்தாா்.

சபை அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »