அரசுக்கு ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்பை ஏற்ற ஹாபீஸ் நசீர் அஹ்மத்தை கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
இன்று மாலை கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுக்கு ஆதரவளித்து பின்னர் அதிலிருந்து வெளியேறிய இதர எம்.பிக்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.