நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக எஸ்.வியாழேந்திரனும், கிராமிய வீதி அபிவிருத்திகள் இராஜாங்க அமைச்சராக பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திர காந்தனும், நெசவு கைத்தொழில், உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் புதிதாக 24 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.