எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும், எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது,
இதனால், எரிவாயு வழங்கும் நிறுவனங்களுக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள 10 மில்லியன் டொலர்களை செலுத்தும் வரை எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இன்று (13) தொடக்கம் எதிர்வரும் 17ஆம் திகதி வரை முத்துராஜவெல எரிவாயு முனையத்தில் எரிவாயு தரையிறக்கம் மற்றும் விநியோக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.