மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில் உள்ள ஒருவர் அவரது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 5,972 ரூபா போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபட்டுள்ளது.
இந்த பட்டியலின் படி, நபர் ஒருவரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பது கொழும்பு மாவட்டத்திலாகும். அது 6,482 ரூபாவாகும்.
இந்த பட்டியலில் குறைந்த பெறுமதி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.