Our Feeds


Saturday, April 30, 2022

ShortNews Admin

பிலியந்தலை டயர் விற்பனை நிலையத்தில் பாரிய தீ - கட்டுப்படுத்த பெரும் முயற்சி



பிலியந்தலை – போகுந்தர பிரதேசத்தில் உள்ள டயர் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இன்று முற்பகல் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தீ பரவலில் பொருட்களுக்கு சேதங்கள் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »