அனைத்து கப்பல் கட்டணங்களையும் டொலரில் செலுத்துமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் துறைமுக அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கப்பல் நிறுவனங்கள் செலுத்தும் கொடுப்பனவுகள் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமெரிக்க டொலர்களில் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கும் டொலர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனூடாக அதிகார சபையின் வருடாந்த வருமானம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.