காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக முன்றலில் கடந்த
இரண்டு நாட்களாக பல்வேறு தரப்பினராலும் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.கடந்த பல மாதங்களாக காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஆர்ப்பாட்ட இடம் என பெயர்ப்பலகை காட்சிப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் காலிமுக ஆர்ப்பாட்டத்தின் அந்த இடத்திற்கு ‘கோடகோகம’ என்று பெயரிடப்பட்டு மற்றும் அவர்கள் அதை கூகுள் மேப் இலும் இணைத்துள்ளனர்.