நாளைய தொழிற்சங்க நடவடிக்கையினால் ஒருநாள் சேவைகளுக்கு (One day Service) இடையூறு ஏற்படமாட்டாது என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் ஒரு நாள் சேவைகள் நாளைய தினமும் வழமை போல முன்னெடுக்கப்படுமென அச்சங்கம் தெரிவித்துள்ளது.