பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல் குறித்த பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
தனக்கு சுகயீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிவரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நேற்றிரவு முதல் சமூக வலைத்தளங்களில் பிரதமரின் உடல்நிலை தொடர்பான செய்திகள் வெளியாகி வந்த நிலையிலேயே தற்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.